அமெரிக்காவில் வீசிய கடும் புயலுக்கு 5 பேர் பலியாகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் வட கிழக்கு மாகாணங்களில் மணிக்கு 129 கி.மீ வேகத்தில் புயல் வீசியது. போஷ்டான் பகுதியில் புயலின் தாக்குதல் கடுமையாக உள்ளது.
இதனால் போஷ்டான் நகரெங்கும் வெள்ள காடாக காட்சியளிக்கிறது. புயலின் தாக்கத்தினால் கிழக்கு கடற்கரை பகுதியின் விர்ஜினியா முதல் மைனே வரையுள்ள 1.7 மில்லியனுக்கும் அதிகமாக வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில் மணிக்கு 96 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதனால் அங்குள்ள அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
புயல் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.