அமெரிக்காவில் பதற்றம் : துப்பாக்கிகளுடன் திரிந்த வாலிபர் கைது
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலம் ஒர்லாண்டா நகரில் உள்ள ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில், நேற்று கேளிக்கை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த போது, அங்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு இளைஞர் அங்கிருந்தவர்களை நோக்கி சராமரியாக சுட்டான். இதில் சம்பவ இடத்திலேயே 50 பேர் பலியாகினர்.
மேலும் 50க்கும் மேற்பட்டோர் பலத்த காயாமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்திய வாலிபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள், கலிபோர்னியாவின் வெஸ்ட் ஹாலிங்வுட் பகுதியில் சந்தேகப்படும் படியாக சுற்றிய ஒரு வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில் அவன் பெயர் ஜேம்ஸ் வெஸ்லி ஹொவெல் (20) என்பதும், அவன் இண்டியானா நாட்டை சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது. அவனிடம் இருந்து மூன்று துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளன்ர்.
அவன் எந்த மாதிரியான தாக்குதலில் ஈடுபட திட்டம் தீட்டியிருந்தான் என்பது விசாரணையில் தெரியவரும். ஆயுதங்களுடன் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.