அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள லிங்கன் கவுண்டி பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் துணை ஷெரீப் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள லிங்கன் கவுண்டி பகுதியில் உள்ள மூன்று வீடுகளில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மாவட்ட முதன்மை அதிகாரியான துணை ஷெரீப் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். குறித்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக மிசிசிப்பி புலனாய்வு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன் விரோதம் காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. துப்பாக்கிச்சூடு தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 35 வயதுள்ள ஒருவரை கைது செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாக்குதலுக்கு உண்டான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்காக அப்பகுதி மக்கள் பிராத்தனை மேற்கொண்டனர்.