இலங்கையின் பிரபல பாடகியான டீஷா பெரேரா அமெரிக்க சஞ்சிகை ஒன்றின் முன்பக்கத்தில் இடம்பிடித்துள்ளார்.
ஒகஸ்ட் மாத ரிதமிக் லோன்ஞ் என்ற இசை சஞ்சினையின் முன் பக்கத்திலேயே அவர் இடம்பிடித்துள்ளார்.
அமெரிக்க சஞ்சிகையின் முன் பக்கத்தில் இடம்பிடித்தமை தொடர்பில் பாடகி டீஷா பெரேரா கருத்து வெளியிட்டார்.
தனது தொழிலுக்கமைய ஆங்கில மொழியில் பாடல் எழுதியமையே வாழ்க்கையின் மிகப்பெரிய சவால் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அமெரிக்க ரெகோர்டிங் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளன. இவ்வாறான கைச்சாத்திட்ட முதல் இலங்கை பாடகியாக நான் உள்ளேன. இது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனை என டீஷா பெரேராமேலும் தெரிவித்துள்ளார்.