அமெரிக்காவில் கடுமையாக வீசும் பனிப்புயல் காரணமாக இன்று 1600 விமானங்களின் பறப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது பனியின் தாக்கம் அதிகமாக உள்ளநிலையில், மத்திய அமெரிக்காவில் நேற்று முதல் கடும் பனிப்புயல் வீசி வருவதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீதிககளில் பனி சூழ்ந்து காணப்படுவதால் வாகனங்களை இயக்க முடியவில்லை எனவும் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மத்திய மேற்கு மாநிலங்களில் பனிப்புயல் காரணமாக இன்று 10 அங்குலம் அளவிற்கு பனிப்படலம் படர வாய்ப்பு இருப்பதாகவும், சில மாநிலங்களில் 12 அங்குலம் அளவிற்கு பனிப்படலம் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடந்து அமெரிக்காவின் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் 1600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பனிப்புயல் தாக்கும் என அறிவிக்கப்பட்ட மாநிலங்களில் 1.4 கோடி மக்கள் வசிக்கின்றனர். கடுமையான காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கன்சாஸ், மிசவுரி, நெப்ரஸ்கா, அயோவா மாநிலங்களில் 2 கோடி மக்கள் வசிக்கின்றனர். எனவே அவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்