அமெரிக்காவில் இலங்கையர் உட்பட 45 பேர் கைது!
இலங்கையர் ஒருவர் உட்பட்ட 45 பேர் அமரிக்காவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குற்றவியல் சட்டத்தின்கீழ் இன்டர்போல் அறிவுறுத்தலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த நபர்கள் அமெரிக்காவின் அனைத்து இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போதே கைதுசெய்யப்பட்டனர்.
கடந்த 21ஆம் திகதியில் இருந்து 23ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அமரிக்க குடிவரவு அதிகாரிகள் மற்றும் அமெரிக்காவின் மார்சல்ஸ் சேவையினர் இணைந்து குறித்த நபர்களை கைதுசெய்துள்ளதாகவும் அமரிக்கா உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த அமைச்சின் அறிக்கையின்படி 38 வயதான பொதுவிலாகே உசான் பேனாட் கருணாரட்ன என்பவர் இலங்கையில் மோசடிகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கை பொலிஸாரினரால் மேற்கொள்ளப்பட்ட இன்டர்போல் அறிவித்தலின்பேரிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவருடன் கைதுசெய்யப்பட்ட ஏனையவர்கள் லத்தீன் அமெரிக்கா,ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களாவர் என தெரியவந்தள்ளது.
இதேவேளை கடந்த வருடத்தில் மாத்திரம், அமரிக்க குடிவரவுத்துறையினரால் குற்றங்களுடன் தொடர்புடைய 235ஆயிரத்து 413 வெளி நாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டனர் என்பதும்குறிப்பிடத்தக்கது.