அமெரிக்காவில் இடம்பெற்ற பயங்கர ரயில் விபத்தால் பரபரப்பு!! 100பேர்கள் வரை காயம்???
யு.எஸ்.-நியு ஜேர்சியில் பயணிகள் ரயில் ஒன்று வியாழக்கிழமை பரபரப்பான காலை நேரத்தில் ரயில் நிலையம் ஒன்றுடன் மோதி நொருங்கியுதில் மூவர் கொல்லப்பட்டதுடன் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
பெண் ஒருவர் கான்கிரீட்டிற்கு அடியில் அகப்பட்டு கொண்டதாகவும் பலர் இரத்தம் வழிந்தவாறு காணப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நியு யேர்சி ஹொபொகென் ரயில் நிலையத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. ரயில் நிலையத்தின் உட்புற காத்திருக்கும் பகுதிக்கும் நடை மேடைக்கும் இடையில் ஒரு மூடப்பட்ட பகுதியில் ஸ்தம்பித்துள்ளது. அப்பகுதியில் ஒரு உலோக கட்டமைப்பை உள்ளடக்கிய பகுதி சரிந்து விட்டது.
பெரும்பாலான பயணிகள் இடிபாடுகளிற்குள் அகப்பட்டுகொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தீவிர வாதம் சம்பந்தப்பட்டதா அல்லது திட்டமிடப்பட்டதொரு நடவடிக்கையா என எந்த ஆரம்ப அறிகுறிகளும் தெரியவரவில்லை என சட்ட அமுலாக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில் நியு யோர்க் ஸ்பிரிங் வலியை விட்டு காலை 7.23 மணிக்கு புறப்பட்டு 8.45 மணியளவில் ஹொபொகென் முனையத்தில் நொருங்கியுள்ளது.
ரயிலில் கிட்டத்தட்ட 250 பயணிகள் பயணித்துள்ளனர்.