அமெரிக்காவின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் மங்கள சமரவீர!
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சித்த சுயாதீனத்துடன் இருக்கின்றாரா என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,
வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் சிக்கியுள்ளார். அமெரிக்கா, வெளிவிவகார அமைச்சரை முடக்கி கேள்வி கேட்கின்றது.
அமெரிக்காவின் பிரேரணையில் அமைச்சர் மங்கள சமரவீரவும் கையெழுத்திட்டுள்ளார்.
இதனை நிறைவேற்றுமாறு அமெரிக்கா தற்பொழுது அவருடைய கழுத்தை நெரிக்கிறது. இந்தப் பிரச்சினைகளுக்குள் வெளிவிவகார அமைச்சர் சிக்கியுள்ளார்.
எனினும் ஜனாதிபதியின் நிலைப்பாட்டை மீறி கருத்து வெளியிட அவருக்கு அனுமதி வழங்க முடியாது.
அரச தலைவரின் கருத்தையும் திரிபுபடுத்தும் வகையில் வெளிவிவகார அமைச்சர் செயற்படுகின்றார்.
மேலும், கூட்டு எதிர்க்கட்சியின் நடவடிக்கைகளினால் மத்திய வங்கியின் ஆளுனரை எம்மால் நீக்க முடிந்துள்ளது.
கணக்காய்வாளர் நாயகத்தினால் பிரதமர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.