அமெரிக்கப் புலனாய்வுத்துறையின் பிரதிப் பணிப்பாளராக இருந்த ஆண்ட்ரூ மெக்கபே (Andrew McCabe) கடமையிலிருந்து நீக்கப்பட்டதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இவர் தனது கடமையிலிருந்து இன்னும் சில நாட்களில் ஓய்வுபெறவிருந்த நிலையில், இவரது பதவி நீக்கம் தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானது. இவரது பணிநீக்க உத்தரவை அமெரிக்க சட்ட மா அதிபர் ஜெஃப் செசன்ஸ் (Jeff Sessions) பிறப்பித்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ரஷ்யத் தலையீடு இருந்தமை தொடர்பான குற்றச்சாட்டுடன் ஆண்ட்ரூ மெக்கபே சம்மந்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை ஆண்ட்ரூ மெக்கபே மறுத்துள்ளார்.
பதவியிலிருந்து ஆண்ட்ரூ மெக்கபே முறைப்படி ஓய்வு பெற்றிருந்தால், ஓய்வூதியச் சலுகைகள் அவருக்குக் கிடைத்திருக்கும். ஆனால், கடமையிலிருந்து அவர் நீக்கப்பட்டதால், ஓய்வூதியச் சலுகைகளை அவர் இழக்க நேரிடுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.