பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் நிர்வாணத்துடன் திரியும் மர்ம நபர் ஒருவரினால் மக்கள் பெரும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர். நிர்வாணமாக இந்த நபர் குறித்த பகுதியில் சஞ்சரித்த காரணத்தினால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.
குறித்த நிர்வாண நபர் பின்வத்த பிரதேசத்தின் இரண்டு வீடுகளுக்கு புகுந்து, திடீரென அந்த வீடுகளை விட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்த நபரை கைது செய்ய பிரதேச மக்கள் முயற்சித்த போதிலும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நபர் ஒர் அமானுஸ்ய சக்தி, கிறிஸ் பேய், மன நோயாளி, கள்வர் என பல்வேறு வதந்திகளினால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்தப் பகுதியின் பாதுகாப்பிற்காக பொலிஸார் விசேட ரோந்துப் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.