ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் அமரர் எஸ்.டப்ளியு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 119வது ஜனன தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு இன்று (08) முற்பகல் காலி முகத்திடலில் உள்ள அமரர் பண்டாரநாயக்கவின் உருவச் சிலைக்கு முன்பாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையாரும் முதலில் அமரர் பண்டாரநாயக்கவின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களான அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, சுசில் பிரேமஜயந்த, துமிந்த திசாநாயக்க ஆகியோர் உருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
சுனேத்திரா பண்டாரநாயக்க உள்ளிட்ட குடும்ப அங்கத்தவர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.