அபுதாபியிலிருந்து கேரள மாநிலத்தின் கோழிக்கோடு நகரை நோக்கி இன்று புறப்பட்ட விமானமொன்று, என்ஜினில் ஏற்பட்ட தீ காரணமாக திரும்பிச் சென்று மீண்டும் அபுதாபியில் தரையிறங்கியது.
எயார் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் பிளைட் IX 348 விமானமே இவ்வாறு திரும்பிச் சென்றது.
பேரிங் 737 -800 ரகத்தைச் சேர்ந்த இவ்விமானத்தில் 184 பயணிகள் இருந்தனர் என எயார் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அபுதாயிலிருந்து இந்திய, இலங்கை நேரப்படி காலை 9.59 மணிக்கு இவ்விமானம் புறப்பட்டது. எனினும் 45 நிமிடங்களின் பின் அவ்விமானம் திரும்பி வந்து மீண்டும் தரையிறங்கியது என அறிவிக்கப்பட்டுள்ளது.