அழகான சிறிய நாட்டிலே நிலையான நீண்ட அபிவிருத்தியைக் கொண்டு வருவதற்கு எல்லோரும் ஒரு தாயின் பிள்ளைகளாக ஒன்றாக இணைந்து சமாதானமாக வாழ வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோலட் கூரே தெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் நேற்று(23) நடைபெற்ற போது நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலையே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது
இந்த உலகத்திலே சகல நாட்டிலயும் சகல முஸ்லிம் மக்களுக்கும் ஒரே ஒரு தெய்வம் தான் இருக்கிறது. ஆனால் மற்ற மதங்களில் மிக மிக நிறைய தெய்வங்கள் இருக்கிறது. புத்த பெருமான போதித்ததை போல் முகமட் பெருமானும் போதித்த மனிதத் தன்மை இன,மத,குல எல்லாம்முஸ்ல் இருக்க வேம் மக்களுக்கும் இருக்கிறது.
இந்த சிறிய அழகான அருமையான நாட்டிலே மக்களுக்கு சமாதானமும் சாந்தீயும் இருக்க வேண்டும். அந்த சமாதானமும் சாந்தியும் இல்லாமல் அபிவிருத்தியை கொண்டு வர முடியாது. ஆகவே நீங்கள் நாங்கள் என எல்லொரும் ஒரு தாயின் பிள்ளைகளாக இருந்தால் இந்த நாட்டிற்கு அபிவிருத்தியை கொண்டு வரமுடியும்.
இதனைவிடுத்து சின்ன சின்ன துண்டுகளாக பிரிந்து இருப்பதனை தவிர்த்து அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள் போன்று இந்த நாட்டிலே ஒன்றாக வாழ வேண்டும். அவ்வாறில்லாது துண்டுகளாக இருந்தால் பெரிய பிரச்சனைகள் தான் ஏற்படும்.
தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் என அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டுமென்று தான் கடவுள் சொல்லியிருக்கிறது. ஆகவே நாம் அவ்வாறேஒன்றாக ஒற்றுமையாக இணைந்து இருப்போமேயானால் இந்த நாட்டில் பலவேறு அபிவிருத்திகளை மேற்கொண்டு மக்களின் வாழ்வையும் வளமாக்கிக் கொள்ள முடியும் என்றார்.