செல்போன்கள் மூலம் பல்வேறு பயன்கள் இருந்தாலும் அதிலிருந்து வரும் கதிர்வீச்சுகள் ஏகப்பட்ட பிரச்சினையை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த ஆய்வுகளின்படி இரண்டு நிமிடங்களுக்கு மேல் செல்போன் கதிர்வீச்சுகள் நீடித்தால் ரத்தத்தில் உள்ள பாதுகாப்பு வளையத்தில் பலவீனம் ஏற்படும் ஆபத்து உள்ளது. அதன் காரணமாக ரத்தத்தில் உள்ள புரோட்டீன்கள் மற்றும் டாக்சின்கள் கசிந்து மூளைக்குள் செல்லும் என்றும் அதனால் மூளைக்கோளாறுகள் ஏற்பட்டு மனச்சிதைவு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
செல்போன் கதிர்வீச்சுகள் மிகவும் குறைவான அளவில் இருக்கும்போது ரத்தத்தின் சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபினில் கசிவு ஏற்படும். செல்போன்களுக்கும் மூளையில் ஏற்படும் கட்டிகளுக்கும் இடையே ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எரிவாயு சேமிப்பு நிலையங்களில் பெட்ரோலிய புகையையே தீப்பிடிக்க வைக்கும் அளவுக்கு செல்போனின் கதிர்வீச்சு சக்திவாய்ந்ததாக இருக்கிறது என்றும் அந்த ஆராய்ச்சி கூறுகிறது.
செல்போன் கருவி, செல்போன் டவர் ஆகியவற்றில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். செல்போன் கதிர்வீச்சுகளால் மனிதர்களுக்கு புற்றுநோய் அல்லது கட்டி ஏற்படலாம். அதிக ரத்த அழுத்தம் ஏற்படலாம். கர்ப்பிணி பெண்களுக்கும் பாதிப்பு ஏற்படும் ஆபத்தும் உள்ளது.
அதிக நேரம் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தால் தலைவலியும் வரும். நீண்ட நேரம் செல்போன்களை பயன்படுத்துவதால் காதுகள் சூடாகிவிடும். தோலில் எரிச்சல் ஏற்படும். ஞாபகசக்தியும் குறைய வாய்ப்பு உண்டு. பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளுக்கு தலை சிறியதாக இருப்பதால் அவர்களுக்கு செல்போனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சின் தாக்கமும் அதிகமாக இருக்கும். அதனால் அவர்களுக்கு பல உடல்நலக்கோளாறுகள் ஏற்படும்.
சரி இதையெல்லாம் தடுக்க முடியாதா? என்றால் நமது செயல்பாட்டால் ஓரளவுக்கு தடுக்க முடியும். செல்போன்களை அவசர அவசியத்துக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிக நேரம் உரையாடுவதை தவிர்க்க வேண்டும். செல்போன் ‘ஹெட்செட்’ பயன்படுத்திக்கொள்வது மிகச்சிறந்த பாதுகாப்பு முறை. காதுகளுக்கு மிக அருகில் செல்போனை வைத்து பேசுவதை தவிர்க்க வேண்டும். கார்களில் பயணிக்கும்போது செல்போன்களுக்காக இருக்கும் பிரத்யேக நார்கிட்டை பயன்படுத்துவது சிறந்தது. அப்போது பாதிப்பும் இருக்காது. கவனக்குறைவும் இருக்காது. இருசக்கர வாகனங்களை ஓட்டும்போது செல்போன்களை பயன்படுத்தக்கூடாது.
மருத்துவமனைகளில் குறிப்பாக தீவிர சிகிச்சை பிரிவில் செல்போன்களை உபயோகிக்கக்கூடாது. ஹியரிங் எய்டை பயன்படுத்துவோர் செல்போன்களை பயன்படுத்தக்கூடாது. பள்ளிக்கூடங்களுக்கு அருகில் செல்போன் டவர்களை அமைக்கக்கூடாது. கூடுமானவரையில் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது என்கிறது அந்த ஆய்வு.