ரிலையன்ஸ் ஜியோ சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் நெட்வொர்க் கோளாறு ஏற்படுவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மொபைல் நெட்வொர்க்கில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக பலர் ட்விட்டரில் குற்றம்சாட்டி வருகின்றனர். கால் டிராப் மற்றும் இணைய சேவைகளை பயன்படுத்த முடியவில்லை என பயனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஜியோவில் ஏற்பட்ட பிரச்சினை குறிப்பிட்ட பகுதியில் ஏற்பட்டுள்ளதா அல்லது நாடு முழுக்க ஏற்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ட்விட்டர் பதிவுகளின் படி, பயனர்கள் இன்று காலை முதல் நெட்வொர்க்கில் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
ரிலையன்ஸ் ஜியோவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டை டேக் செய்து பலர் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதிலும் இருந்து பலர் ஜியோ நெட்வொர்க்கில் கோளாறு ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.
பயனர் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த ஜியோ, “உங்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்கு வருந்துகிறோம். நீங்கள் இணைய சேவைகள், அழைப்புகளை மேற்கொள்வது, குறுந்தகவல்களை அனுப்புவது, பெறுவதில் பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம். இது தற்காலிகமான ஒன்று, எங்கள் குழு இந்த பிரச்சினையை விரைந்து சரிசெய்ய பணியாற்றி வருகிறது,” என தெரிவித்து இருக்கிறது. இதே போன்று பலருக்கும் ஜியோ பதில் அளித்து வருகிறது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]