அன்றும் இன்றுமான தாய்நிலம்தாயத்தில் எங்களுக்கான காவல்த்துறை எந்த அளவு எங்கள் பிள்ளைகளை வழிப்படுத்தினார்கள் என்பதை நாம் அறிவோம்
2009பின் யுத்தத்தால் இழந்த சமூகத்தை வீதி விபத்துகள் கூடவே தின்று கொண்டிருக்கின்றன
சட்டம் தன் கடைமையை நேர்த்தியுடனும் கீர்த்தியுடனும் செய்தால் இது போன்ற தவறுகளை நாம் திருத்தி அமைக்க முடியும்
காவல்த்துறையினருக்கான சம்பளம் என்பது அந்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்து செல்கிறது என்பதாலும் ஏழை மக்களின் உழைப்பில் எழும் அந்நியச் செலாவணியினாலும் கட்டமைக்கப் படுவதாலும் மக்களுக்கு தக்க தருணத்தில் கடமையாற்ற வேண்டியது காவல்த்துறையின் பொறுப்பே ஆகும்
கிளிநொச்சியைப் பொறுத்த அளவில் நகரின் மையப் பகுதியின் நாற்சந்தியில் வீதிச் சமிக்கை விளக்கு இன்றி சூனிய மயப்பட்டிருக்கிறது தினமும் விபத்துக்கு காரணமாகிறது
இதற்கு யார் பொறுப்பு
கிளிநொச்சி மாவட்டத்தைப் பிரிதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினரா
அபிவிருத்தியைக் கையில் எடுப்போரா
பிரதேச சபைகளா
மாவட்ட அரசாங்க அலுவல்களா
காவல்த்துறையினரா
வீதி அபிவிருத்தி அதிகார சபையினரா
அல்லது மக்களா
அரசன் எவ்வழியோ
குடிகள் அவ்வழியே என்ற கோட்பாட்டிற்கிணங்க
பேயாட்சி செய்தால்
பிணந்தின்னும் சாஸ்திரங்கள் என்பதற்கிணங்க
அவலக் கிண்ணத்தில்
குருதி குடிக்கும்
சிங்க மாமிசிகள் மத்தியில்
மங்கிப்போய்க் கிடக்கிறது
மாண்பு மிக்க ஈழமண்
எம்மை விட்டுக் கடந்து செல்லும்
வரவு செலவுத் திட்டத்திலும்
எமக்கு அடிபோடும் திட்டமே அமுலாக்கமாயுள்ளது
இன்று தமிழ் மக்களுக்கான
ஆளுமைத்தன வழிகாட்டியெனச் சொல்ல யாருமிலா கையறு நிலையில்
ஈழ நிலத்தில் கோரச் சாவும் வறுமையும் நோயும் விலை வாசியும் அதிகரித்து தாண்டவமாடுகையில்
இமையம் வரை சென்று கொடியேற்றின சோழனின் வம்சமா நாமென எண்ணத் தோன்றுகிறது
அன்றொரு காலத்தில் டெங்கு மலேரியா புக்கார சுப்பர் சொனிக் மத்தியிலும் கிளித்தொட்டு விளையாடுவது போல்
மீண்டெழுந்தோம் காரணம் உள்ளரண் பலமாயும் நம்பிக்கையுடனும் கட்டியெழுப்பப்பட்டது அன்று எம்மவர் எமக்காகான காவலராயிருந்தனர்
இன்று இருள் சூழ்ந்த ஈழ நிலத்தின் ஒளியேற்ற காலம் ஒரு கதாநாயகனாய்த் தோன்றுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் நாம் நம்மை நிர்வகிக்கும் காலத்தை எண்ணியவராய்..
த. செல்வா