அகதிகளிற்காகப் பாடப்பட்ட பாடல் “Destination Eurovision” இன் வெற்றிப் பரிசைப் பெற்றுள்ளது.
அகதியாக வந்த இடத்தில், தொண்டு நிறுவனங்களால் காப்பாற்றப்பட்ட நிஜேர் தம்பதியினரில், மனைவி Aquarius கப்பலில் ஒரு குழந்தையைப் பெற்றுள்ளார். அந்தக் குழந்தை மேர்சி என அழைக்கப்பட்டது.
இந்தக் குழந்தைக்காகவும், அகதியாக வந்த அனைவரிற்காகவும் ஒரு பாடலாக Madame Monsieur எனும் குழு,
“Je suis née ce matin
Je m’appelle Mercy
Au milieu de la mer
Entre deux pays, Mercy.”
எனும் பாடலைப் பாடியது. இந்தப் பாடல் வெற்றி ஈட்டியுள்ளது. இந்தப் பாடலைக் கேட்ட அனைவரும் ஒரு கணம் தங்களை மறந்து, அகதிகளாக வருபவர்களின் துன்பத்தை உணர்ந்து இருப்பார்கள் என்பது நிச்சயம்.
அகதிகளாக வருபவர்களின் நீண்ட பயணங்களும் துன்பங்களும் பாடலில் வெளிக்காட்டப்பட்டுள்ளன.