தமிழ் மக்களின் இலட்சியத்திற்கும் கனவுக்கும் எதிராக செயற்படுவர்களுக்கு மக்கள் எத்தகைய பாடங்களை கற்பிப்பார்கள், எத்தகைய எதிர்வினைகளை ஆற்றுவார்கள் என்பதை அண்மைய காலத்தில் கண்டோம்.
தமிழ் மக்களை எவரும் ஏமாற்ற முடியாது. தமிழ் மக்களை வைத்து எவரும் சுயலாப அரசியலை செய்ய முடியாது. தமிழ் மக்களை ஏமாற்றினால் ஒட்டுமொத்த உலகத் தமிழரும் சீற்றம் கொள்வார்கள்.
புலத்தில் நடந்த சில பிரகடன முயற்சிகள் தாயகத்திலும் புலத்திலும் தோலுரிக்கப்பட்டன. அதனை மக்கள் இயல்பாகவே செய்தனர். ஏமாற்றுக்களின் முகத்திரை கிழித்தெறியப்பட்டது. போலிகளின் சாயம் வெளுத்தது.
எனவே இந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு புலத்திலும் நிலத்திலும் உள்ள அமைப்புக்களும் பிரமுகர்களும் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
இனிவரும் காலத்திலாவது மக்களை ஏமாற்றாமல் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவதானமாக நடக்க வேண்டும். இல்லையேல் மக்களால் தூக்கி வீசப்படுவீர்கள் என்பதை மறவாதீர்கள்.
ஊடகப் போராளி கிருபா பிள்ளை