எந்தக் குறைபாடாக இருந்தாலும் அதை அகற்றும் ஆற்றல், உள்ளம் உருகி வழிபடும் இறைவழிபாட்டிற்கு உண்டு. ஆனால் அதற்கு முழுமையான நம்பிக்கை தேவை.
மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட
மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரம்மனாட
கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட குஞ்சர முகத்தனாட
குண்டலமிரண்டாட தண்டைபுலி யுடையாட குழந்தை
முருகேசனாட ஞான சம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனியட்ட
பாலகருமாட நரை தும்பையறுகாட நந்திவாகனமாட நாட்டியப்
பெண்களாட வினையோட உனைப்பாட யெனைநாடி இது வேளை
விருதோடு ஆடி வருவாய் ஈசனே சிவகாமி நேசனே
எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.
நடராஜப் பத்து.
பொதுப் பொருள்:
மான், மழு, நிலவு, கங்கை, சிவகாமியம்மை, திருமால், நான்மறைகள், நான்முகன், தேவர்கள், விநாயகப் பெருமான், இரு செவி குண்டலங்கள், தண்டை, புலித்தோல் ஆடை, குமரன், ஞானசம்பந்தர், இந்திராதி அஷ்டதிக்பாலகர்கள், நந்தியம் பெருமான், நாட்டிய மகளிரோடு எம் வினையோடி உனைப்பாட எம்மை நாடி இதுவே வேளை என்று ஆடி வருவாய் சிவபெருமானே! சிவகாமி நேசனே! எம்மைப் பெற்ற தில்லைவாழ் நடராஜனே!
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]