ஒரு கோட்டையைக் கட்டுவதை விடவும் உன்னதமான விடயம். இந்த அனாமிகா களரி பண்பாட்டு மையம் கட்டியது இங்கு பகட்டான விடயம் ஒன்றும் கிடையாது. நான் ஒரு விதத்தில் பொறாமையும் கொள்கின்றேன்.
நாங்களும் நடிகர் சங்கததிற்கு ஒரு கட்டிடம் கட்டுக்கொண்டிருக்கின்றோம். பல பிரபலங்கள் இருந்தும் பல ஆண்டுகளாகிறது.
ஆனால் ஒரு எளிய மனிதனாக இருந்து தன்னுடைய நண்பர்கள் மூலமாக தெரிந்தவர்கள் மூலமாக செங்கல் செங்கலாக பெற்று இந்த கலைக் கூடத்தை கட்டி முடித்துள்ளார் பேராசிரியர் பாலசுகுமாரன் என தென்னிந்திய திரைப்பட நடிகர் நாசர் புகழாரம் சூட்டினார்.
திருகோணமலை மூதூர் சேனையூரில் அமைக்கபட்டுள்ள அனாமிகா களரி பண்பாட்டு மையம் திறப்பு விழாவில் 06 ஆம் திகதி சனிக்கிழமை அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தனது உரையில் நாசர் ;
சேனையூருக்கு வந்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பேராசிரியர் பாலசுகுமாரன் ஜயா அவர்களை நான் வெகு நாட்களாக அறிவேன்.
நாடகம் எங்களுக்கு பொது மொழியாக இருந்தது. அவருடைய மாணவர்கள் என்னுடைய மாணவர்களாக இருந்திருக்கிறார்கள்.
நாங்கள் எப்போது பேசிநாளும் நாடங்களைப் பற்றி வெகுவாக பேசுவோம் நிகழ்கலைகளைப் எவ்வாறு பாதுகாக்கலாம் என்று போசுவோம். அந்த உறவில் மலர்ந்ததுதான் எங்கள் நட்பு.
ஒரு நாள் மிகுந்த துயரச்செய்தியோடு என்னிடம் வந்தார் பாலசுகுமாரன் ஐயா அவர்கள் தான் பல கனவுகளுடன் அன்பாக வளர்த்த தனது குழந்தை தன் எதிரிலேயே இயற்கை இழுத்துச் சென்றது என்றார்.
அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை.நான் ஐயோ என்று கூட சொல்லவில்லை உறைந்து போய் நின்றேன்.
ஆனால் அதனுடைய மிகப் பெரிய சிறப்பு பெற்றோருக்கு ஒர் குழந்தையின் இழப்பு என்பது அதுவும் அந்த வயதினில் என்பது மிகப்பெரிய இழப்பு ஆனால் அதை ஒரு வைராக்கியமாக எடுத்துக் கொண்டு இந்த இழப்பையும் துயரத்தையும் ஒரு ஆக்கபூர்வமாக செய்ய முடியும் என்று ஒரு படிப்பினையை அவர் செய்து காட்டி இருக்கிறார்.
ஆக இந்த நூலகம் மற்றும் பண்பாட்டு மையம் என்பது ஒரு பெரிய படிப்பினை நாம் எவ்வளவோ அழுக்கின்றோம் எவ்வளவோ வருத்தப்படுகின்றோம் அவற்றை எல்லாம் ஒன்று திரட்டி ஒரு ஆக்கபூர்மாக மாற்ற முடியும் என்பதற்கு உதாரணமாக என்னுடைய நண்பரான பேராசிரியர் பாலசுகுமாரன் ஐயா செயலாற்றி இருக்கிறார். என தென்னிந்திய திரைப்பட நடிகரும் இயக்குனருமான நாசர் தெரிவித்தார்.