சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற 40 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
மன்னருக்கு வடக்கே உள்ள கடற்பரப்பில் கடற்படையினர் நேற்றுமுன்தினம் மேற்கொண்ட ரோந்துப் பணிகளின்போது இந்த 04 இந்திய மீன்பிடிக் கப்பல்களுடன் 40 நபர்களுடன் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அதன் பின்னர் இலங்கை கடலுக்குள் அத்துமீறிய முயற்சித்த நபர்களும் அவர்களது படகுகளும் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டன.
வெளிநாடுகளிலிருந்து கடல் மார்க்கமாக வெளிநாட்டினர் நாட்டுக்குள் நுழையும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதானால், கொரோனா பரவும் ஆபரத்தும் காணப்படுகிறது.
இந் நிலையில் இலங்கை கடற்படையினர் 24 மணிநேரமும் நாட்டின் கடற்பரப்புகளில் நேர ரோந்துப் பணிகளை அதிகரித்துள்ளனர்.