லங்கா ச.தொ.ச. மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம், மாகாண சபைகளின் கீழ் வரும் கடமைகள் மற்றும் அனைத்து சுகாதார சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் ஒரு அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவத்தலின் படி,
- வரையறுக்கப்பட்ட இலங்கை கூ.மொ.வி. நிலையம், கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம், உணவு ஆணையாளர் திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் கலக உணவு, குடிபானப் பொருட்கள் உள்ளிட்ட பொது மக்களுக்கத் தேதவையான ஏனைய சகல நுவர்வுப் பொருட்கள் வழங்குதல், கஞ்சியப்படுத்துதல், விநியோகத்தல் மற்றும் ஒழுங்குறுத்துகை நடவடிக்கைகள் தொடர்பாகத் தேவையான அல்லது மேற்கொள்ளப்பட வேண்டுமெனக் கருத்தப்படும் சகல சேவைகள், வேலைகள் அல்லது எந்தவொரு விதத்திலான தொழில் பங்களிப்பை வழங்குதல்.
- மாகாண சபைகளின் கீழழுள்ள சகல அரச அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய அல்லது தேவைப்படும் எந்த வகையிலான சகல சேவைகள், வேலைகள் அல்லது தொழில் பங்களிப்பு.
- சுகாதார சேவைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அல்லது தேவைப்படும் எந்த வகையிலான சகல சேவைகள், வேலைகள் அல்லது தொழில் பங்களிப்பு.
மேற்குறிப்பிடப்பட்ட பிரிவின் கருமங்களுக்காக அத்தியாவசிய சேவைகளென இநத ஆணையின் மூலம் பிரகடணம் செய்யப்பட்டுள்ளது.