நுகர்வோரின் நலனைக் கருத்திற் கொண்டு லங்கா சதொச நிறுவனம் அத்தியாவசிய உணவு பொருட்கள சிலவற்றின் விலைகளை குறைத்துள்ளது.
அதற்கமைய இன்று (18) புதன்கிழமை முதல் நாடளாவிய ரீதியிலுள்ள சகல சதொச விற்பனை நிலையங்களிலும் இப்புதிய விலைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு கிலோ கிராம் வெள்ளைப்பூண்டின் விலை 60 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இதன் புதிய விலை 490 ரூபாவாகும். மாவின் விலை 55 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளமைக்கமைய அதன் புதிய விலை 320 ரூபாவாகும்.
ஒரு கிலோ கிராம் நெத்தலியின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளமைக்கமைய அதன் புதிய விலை 1450 ரூபாவாகும். கடலைப்பருப்பின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 285 ரூபாவாகும்.
வெள்ளை சீனியின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளமைக்கமைய அதன் புதிய விலை 260 ரூபாவாகும். இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசியின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 169 ரூபாவாகும்.