அதிரடிக்கு தயாரான அவுஸ்திரேலியா: சொந்த மண்ணில் இலங்கைக்கு அடுத்த சவால்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கை பயணமாகியுள்ளது.
கிட்டத்தட்ட 2 மாதங்கள் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் ஆடுகிறது.
இவ்விரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பல்லேகலேவில் எதிர்வரும் 26ம் திகதி தொடங்குகிறது. அதே போல் ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 21ம் திகதியும், டி20 தொடர் செப்டெம்பர் 1ம் திகதியும் ஆரம்பமாகிறது.
சமீபத்தில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை இழந்தது.
இந்த நிலையில் சொந்த மண்ணில் வலுவான அணியான அவுஸ்திரேலியாவுடன் நடக்கும் இந்த தொடர் இளம் இலங்கை அணிக்கு அதிக நெருக்கடியை கொடுக்கும் விதமாக அமையும்.