உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸான ஒமிக்ரோன், ஏனைய டெல்டா வைரஸ்களை விட அதிக வேகத்தில் பரவுவதாக மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பதாவது….
” டெல்டா வகை கொரோனாவை விட, ஒமிக்ரோன் வகை கொரோனா, 70 மடங்கு அதிக வேகத்தில் பரவி, மற்றவர்களை பாதிக்கிறது. அதிவேகமாக நுரையீரல் பகுதிக்கு செல்லும் ஒமிக்ரோன், டெல்டாவை விட மிக குறைவாகவே நுரையீரலை பாதிப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைக்கும் மருத்துவ நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் அண்மைய ஆய்வின்படி உலகம் முழுவதும் ஏறத்தாழ 7000 நபருக்கு ஓமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
டொக்டர் ஸ்ரீதேவி.
தொகுப்பு அனுஷா.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]