பயணத்தடை அமுலாகும் காலப்பகுதியில் அனுமதி பெற்று திறக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள் அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்ய முடியாது.
முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையங்களின் அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று திறக்கப்பட்டிருந்த வர்த்தக நிலையங்களை கண்காணித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பயணத்தடை அமுலாகும் காலப்பகுதியில் கிராம சேவகர் பிரிவொன்றில் தலா 2 வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கும் நோக்கில் கிராம சேவகர் பிரிவொன்றில், அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் இரண்டு வர்த்தக நிலையங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.