அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த 29 வர்த்தக நிலையங்களுக்கு 41 இலட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வத்தளை, அத்தனகல்ல, நீர்கொழும்பு, மினுவங்கொடை, கம்பஹா மற்றும் மஹர நீதிமன்றங்களால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த இரண்டு வர்த்தக நிலையங்களுக்கு எதிராக இரண்டு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து வலஸ்முல்ல நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
மற்றுமொரு வர்த்தக நிலையத்துக்கு மாத்தறை நீதிமன்றத்தினால் ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதுடன், ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தினால் அறுவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதான, நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை அண்மையில் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது. அதன்படி வெள்ளை நிற முட்டைகள் 44 ரூபாய்க்கும், சிவப்பு நிற முட்டைகள் 46 ரூபாய்க்கும் விற்பனை செய்ய முடியும்.
இருப்பினும் கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.