தொழில்நுட்ப கல்வியை பெற்றுக்கொடுத்து அதிகளவிலான தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் தொழில்நுட்ப கல்லூரி ஒன்றை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் இந்நாட்டின் இளைஞர் யுவதிகளின் வேலை பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.