அமெரிக்க டொலரின் விற்பனை விலையானது இன்று (11) மேலும் பல அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அதிகரித்துள்ளது.
அதனடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்று இன்றைய தினம் 330 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (11) 327.49 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 316.79 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. .
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]