தற்போதைய காலக்கட்டத்தில் பல உணவு வகைகளிலும் உப்பு அதிகமாக சேர்க்கப்படுகிறது. உப்பு என்பது உணவுக்கு சுவை கொடுக்கிறது.
மேலும் ன் நாம் உட்கொள்ளும் உணவு நமது உடலில் செரிமானம் ஆகுவதற்கு உப்பு உதவுகிறது. ஆனால் இந்த நன்மையெல்லாம் எப்போது வாய்க்கும் தெரியுமா?
உப்பை அளவோடு உட்கொள்ளும் போதுதான். தினமும் நாம் உடம்புக்கு சோடியம் தேவைதான் ஆனால் அதிகமாக உட்கொள்ளும் போது பக்க விளைவுகளை ஏற்படலாம்.
இதயநோய்
உப்பு அதிகமாக உட்கொள்ளும் போது இதய நோய்கள் உருவாகும். உங்களுக்கு ஆரோக்கியமான இதயம் வேண்டும் என்றால், உப்பு சரியான அளவில் பயன்படுத்த வேண்டும்.
சிறுநீரகம்
அதிகளவில் உப்பு சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் பாதிப்படையும்.
உயர் இரத்த அழுத்தம்
அதிகமாக உப்பு எடுத்துக்கொள்ளும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் போன்ற நோய்கள் உருவாகும் ஆபத்து ஏற்படும். இதய நோய்கள் கூட வரலாம்.
நீர்ப்போக்கு
உங்களுக்கு அடிக்கடி நீர்ப்போக்கு ஏற்படுகிறதா? ஆம் என்றால் நீங்கள் அதிகமாக உப்பு உட்கொள்ளுகிறீர்கள் என்று அர்த்தம்.