அண்ணனுக்கு சமந்தா, தம்பியின் காதலி யார் தெரியுமா?
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா பிரபல நடிகரின் மீது காதலில் விழுந்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை நாகர்ஜுன் மகன் நாகசைதன்யா தான், இருவருக்கும் இன்னும் சில மாதங்களில் நிச்சயத்தார்த்தம் நடக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் நாகசைதன்யாவின் தம்பி அகிலும் காதலில் விழுந்துள்ளாராம், கர்நாடகாவை சார்ந்த பிரபல பேஷன் டிசைனர் மற்றும் பிரபல தொழிலதிபரின் மகள் ஷாலினி பூபால் தான் இவர் காதலியாம்.
ஒரே நேரத்தில் அண்ணன், தம்பி இருவரும் காதலிப்பது தொடர்பாக தெலுங்கு மீடியாக்களில் தொடர்ந்து செய்திகள் வருகிறது.