அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகும் Huawei Mate 9
ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் ஏனைய முன்னணி நிறுவனங்களுக்கு சவாலாக சீனாவின் Huawei நிறுவனமும் விளங்குகின்றது.
இந் நிறுவனம் தனது வடிவமைப்பில் உருவான புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
Huawei Mate 9 எனும் இக் கைப்பேசியானது பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள போதிலும் கமெரா தொழில்நுட்பத்தினை முதன்மைப்படுத்தியே அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அனேகமாக நாளை மறுதினம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இக் கைப்பேசியில் டுவல் கமெரா, பிங்கர் பிரிண்ட் தொழில்நுட்பமும் உள்ளடக்கப்பட்டிருக்கும்.
இவை தவிர 5.9 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரை, Kirin 960 Chipset என்பனவற்றினையும் கொண்டுள்ளது.
மேலும் பிரதான நினைவகமாக 4GB அல்லது 6GB RAM, சேமிப்பு நினைவகமாக 64GB, 128GB அல்லது 256GB என்பவற்றினையும் கொண்டிருக்கும்.
எனினும் இதன் விலை உட்பட ஏனைய சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கவில்லை.