அடேங்கப்பா..! சொகுசுக் காரை அறிமுகப்படுத்திய வால்வோ.. எவ்வளவு கோடி தெரியுமா?
XC90 T8 என்ற இந்த சொகுசு கார் இந்தியாவில் அறிமுகமான முதல் ஸ்போர்ட்ஸ் பயன்பாட்டு வாகனமாக அறிமுகமாகியுள்ளது.
ஆடி Q7, பிஎம்டபிள்யூ X5, ரேஞ் ரோவர் ஸ்போர்ட்ஸ் மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் GLS ஆகிய கார்களின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த காரின் விலை ரூ. 1.25 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4 பேர் அமரும் வகையில் இருந்த இந்த கார், தற்போது 7 பேர் அமரும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்புறத் தோற்றமும் மாற்றி வடிவமைக்கபட்டுள்ளது.
சரவுண்டு சிஸ்டத்தில் அருமையாக பாடலை கேட்டு ரசிக்கும் வண்ணம் காரினுள் 20 ஸ்பீக்கர்கள் அமைக்கப்பட்டுள்ளது. தவிர, மின்சார தேவைக்காக 2.0 லிட்டர் டர்போசார்ஜ் எலக்ட்ரிக் மோட்டார் உள்ளது.
மேலும், இந்த காரில் வெறும் 5.6 வினாடிகளில் 100 கி.மீ வேகத்தை அடைய முடியும்.
இந்த காரின் முக்கிய அம்சம் ஒரு லிட்டர் டீசலுக்கு 47.6 கி.மீ பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.