ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட அரசியல் நிச்சயமற்ற தன்மை காரணமாக அடுத்த நான்கு மாதங்களில் 5,00,000 ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இதுவரையில் பெருமளவிலான இடம்பெயர்வுகள் ஆப்கானிஸ்தானில் ஏற்பட வில்லை. காபூலிலிருந்தே மக்கள் வெளியேறுகின்றனர்.
ஏனைய பகுதிகளில் பாரியளவிலான இடம்பெயர்வுகள் இல்லை, ஆனால் தற்போது வளர்ந்து வரும் சூழ்நிலைகள் ஏராளமான மக்கள் நாட்டை விட்டு வெளியேற வழிவகுக்கும் என்று துணை உயர் ஆணையாளர் கெல்லி டி கிளெமென்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்காக அண்டை நாடுகள் தங்கள் எல்லைகளை திறந்து வைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை உலக உணவுத் திட்டம் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஆப்கானியர்களுக்குத் தேவையான உணவு வழங்க 12 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் நிச்சயமற்ற தன்மை, வேலையின்மை மற்றும் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளின் அடிப்படையிலேயே மக்கள் ஆப்கானை விட்டு வெளியேறுகின்றனர்.