தான் அடுத்த வாரம் முதல் கொழும்பிலிருந்து பொலன்னறுவைக்கு ரயிலில் பயணிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பு கோட்டையிலிருந்து பொலன்னறுவை வரையான “புலதிசி” நகர் கடுகதி அதிநவீன சொகுசு ரயில் சேவை நேற்று பிற்பகல் 3.00 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்தது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த ரயில் சேவையை ஆரம்பித்து வைத்ததுடன் பயணத்தில் இணைந்து கொண்டார். அவர் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து மருதானை புகையிரத நிலையம் வரை பயணித்தார். அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட அதிதிகள் பலரும் இந்த பயணத்தில் பங்கேற்றனர்.