ஜனாதிபதி கோத்தபய ராஜபக்க்ஷ தலைமையில் குறைந்த அமைச்சரவை உறுப்பினர்களை உள்ளிக்கிய தற்காலிக அமைச்சரவை எதிர்வரும் வாரம் ஸ்தாபிக்கப்படுவதை தொடர்ந்து ஜனாதிபதி நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலவரம் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக நம்பதகுந்த அரசியல் தரப்பினர் குறிப்பிட்டனர்.
நாட்டின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்ததை தொடர்ந்து அது அரசியல் ரீதியிலான நெருக்கடியினையும் தீவிரப்படுத்தியதால் கடந்த ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சு பதவி வகித்த 26 அமைச்சர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை [03.04.2022]இரவு அமைச்சு பதவிகளில் இருந்து விலகினர்.
அதனை தொடர்ந்து ஜனாதிபதி கோத்தபய ராஜபக்க்ஷ நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை தேசிய பிரச்சினையாக கருதி அமைச்சு பதவிகளை பொறுப்பேற்குமாறு பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.
ஜனாதிபதி கோத்தபய ராஜபக்க்ஷ தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க முடியாது என பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி,மக்கள் விடுதலை முன்னிணி உட்பட ஏனைய அரசியல் கட்சிகள் உறுதியாக குறிப்பிட்டதை தொடர்ந்து இடைக்கால அரசாங்கம் அமைக்கும் தீர்மானம் பிற்போடப்பட்டது.
பாராளுமன்றத்தின் செயற்பாடுகளையும்,நாட்டின் ஏனைய அலுவல்களையும் தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்காக ஜனாதிபதி நிதி,வெளிவிவகாரம்,கல்வி மற்றும் நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சுக்களுக்கு அமைச்சர்களை நியமித்தார்.இடைக்கால அரசாங்கத்தில் ஒன்றினையுமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை பிரதான கட்சிகள் புறக்கணித்து வந்த நிலையில்,
குறைந்தப்பட்ச அமைச்சர்களை உள்ளடக்கிய அமைச்சரவையை எதிர்வரும் வாரம் நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக நம்பதகுந்த அரசியல் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.தற்காலிக அமைச்சரவை நியமனத்தை தொடர்ந்து நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அதனுடன் தோற்றம் பெற்ற அரசியல் ஸ்தீரமற்ற நிலைமை மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால திட்டம் குறித்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]