இலங்கையை பட்டினியால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ள ஐநாவின் இரு அமைப்புகள் இலங்கை எதிர்வரும் மாதங்களில் எதிர்கொள்ளப்போகும் உணவு நெருக்கடி குறித்து எச்சரித்துள்ளன.
உலக உணவு திட்டமும் உணவு விவசாய ஸ்தாபனமும் இணைந்து ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை உலக உணவு நிலை எவ்வாறானதாக காணப்படும் என்பதை தெளிவுபடுத்தும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன
இலங்கையில் உணவுப்பாதுகாப்பின்மைக்கான முக்கிய காரணங்களாக பொருளாதார நெருக்கடி விலை அதிகரிப்பு பயிர்ச்செய்கை உற்பத்தி வீழ்ச்சி ஆகியன காணப்படுகின்றன.
உள்நாட்டு விவசாய உற்பத்தி சர்வதேச அளவில் விலை அதிகரிப்பு நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடி ஆகியவை இணைந்து கடுமையான உணவு நெருக்கடியையும் பணவீக்கத்தையும் அதிகரிக்கப்போகின்றன இது அடுத்த சில மாதங்களில் உணவுப்பாதுகாப்பில் மேலும் சரிவை ஏற்படுத்தப்போகின்றது.
1948 இல் சுதந்திரம்பெற்ற பின்னர் இலங்கை இம்முறையே மிகமோசமான பொருளதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
கொவிட் பெருந்தொற்றின் தாக்கமும் கொவிட் பரவத்தொடங்குவதற்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட வரிச்சலுகைகளும்இகடந்த பல தசாப்தங்களாக அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன்களை மீள செலுத்த முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளன.
ஏற்கனவே அதிகரித்து காணப்பட்ட எரிபொருள் உணவு விலைகள் மீதான உக்ரைனில் யுத்தத்தின் மோசமான தாக்கத்தினால்இ பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்துள்ளது.அந்நிய செலாவணி கையிருப்பும் குறைவடைந்துள்ளது.
இதன் காரணமாக நாணயபெறுமதியிறக்கம்இஅதிகரிக்கும் உணவு விலைகள் எரிபொருள் தட்டுப்பாடு ஆகியன உருவாகியுள்ளன.
இதற்கு மேலதிகமாக தற்போதைய பொருளாதார நெருக்கடிஇ வேலைவாய்பின்மை வீடுகளின் வருமானம் மீது தாக்கத்தை அதிகரிப்பதுடன் அத்தியாவசிய பொருட்களைபெறுவதை கடினமாக்கியுள்ளது.
உணவு எரிபொருள் இறக்குமதி பொருட்களின் விலைகள் அதிகரிப்பும்இ உணவு விநியோகத்தில் ஏற்படும் குழப்பங்களும் 2022 இல் பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கப்போகின்றனஇஇதன் காரணமாக இலங்கையில் உணவுகள் கிடைப்பது குறைவடையப்போகின்றது.
அதிகாரிகள் ஏப்பிரல் 2021 முதல் நவம்பர் மாதம் நடைமுறைப்படுத்திய உரக்கொள்கை காரணமாக நெல்உற்பத்தி மிகவும் குறைவானதாக காணப்படப்போகின்றது.
இதன் காரணமாக இலங்கை உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்ய இறக்குமதியை நம்பியிருக்கவேண்டியிருக்கும்.எனினும் உள்நாட்டு நாணயத்தின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைக்கூடும் என்பதால் இறக்குமதிக்கான திறன் பாதிக்கப்படும்.
அதிகரிக்கும் அரசியல் பதட்டம் குறித்து கரிசனைகள் அதிகரிக்கின்றன இவை பொருளாதாரத்தின் பாதைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
வருமானம் குறைவடைந்துள்ளமையும் விலை அதிகரிப்பும் போதுமான உணவுகளை பெறுவதற்கான வீடுகளின் திறன்களை பாதிக்கின்றன.
மார்ச் ஏப்பிரல் மாதத்தில் எடுக்கப்பட்ட சிறிய ஆய்வு மூலம் கிட்டத்தட்ட அனைத்து வீடுகளும் உணவு தொடர்பான சமாளிக்கும் உத்திகளை பயன்படுத்துவதும் அரைவாசிக்கும் மேலான வீடுகள் மலிவான அல்லது குறைந்தளவு விரும்பப்படும் உணவுகளை நாளாந்தம் பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது.