அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டி கிடையாதா? அனுராக் தாகூர்
இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என முன்னாள் நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றமும் லோதா கமிட்டி தலைமையிலான பரிந்துரைகளை அப்படியே செயல்படுத்த வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு உத்தரவிட்டது.
தற்போது அதை அப்படியே செயல்படுத்தினால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பெரிய இழப்பு நேரிடும் என்றும், அது மட்டுமில்லாமல் தேசிய அணியின் போட்டிக்கான அட்டவணையும், ஐ.பி.எல் போட்டிக்கான அட்டவணையும் 15 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் எனவும் லோதா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.
அதை அப்படியே செயல்படுத்தினால் அடுத்த ஆண்டு(2017) இங்கிலாந்தில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் யூன் 2 முதல் 18 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து ஐ.பி.எல் போட்டி மே மாதத்தின் கடைசி வாரத்தில் தான் முடிவடையும்.
இதனால் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையடா இயலுமா என்பது தெரியவில்லை எனவும் லோதா கமிட்டி சிபாரிசு படி பார்த்தால் அடுத்த ஆண்டில் ஐ.பி.எல். போட்டி அல்லது சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஒன்றை தவிர்க்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அனுராக் தாகூர் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் உரிய முடிவு எடுக்கும் எனவும் கூறியுள்ளார்