அஜித் எந்த ஒரு விழாவிற்கும் வராததற்கு இது தான் காரணமா?
அஜித்தை எந்த ஒரு ஆடம்பர நிகழ்ச்சிகளிலும் பார்க்க முடியாது. அரசாங்க சம்மந்தப்பட்ட சினிமா நிகழ்ச்சியில் மட்டுமே கலந்துக்கொள்வார்.
இவர் இப்படி எந்த ஒரு விழாவிலும் கலந்துக்கொள்ளாமல் இருப்பதற்கு அவரே பில்லா படம் வந்த போது ஒரு கருத்தை கூறியுள்ளார்.
இதில் ‘எந்த ஒரு சினிமா விழாவிற்கு சென்றாலும் படத்தை புகழ்ந்து பேச சொல்கிறார்கள், படம் நன்றாக இருந்தால் அதுவே ஓடும், படத்தை பார்க்கமாலே எப்படி புகழ்ந்து பேசுவது.
அதுமட்டுமின்றி ஒரு விழாவில் ஒருவரையே புகழ்ந்து பேசுவது எனக்கு உடன்பாடில்லை’ என கூறியுள்ளார். இதன் காரணமாகவே அஜித் பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேறவில்லையாம்.