தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பில் தயாராகி வரும் ‘ வலிமை’ படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.
‘நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தை தொடர்ந்து இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் :வலிமை’.
இதில் நடிகர் அஜித்குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘காலா’ பட புகழ் நடிகை ஹூமா குரேஷி நடிக்கிறார்.
இவர்களுடன் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, பவெல் நவகீதன், புகழ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப் பட்டிருக்கும் ‘ வலிமை’ படத்தின் சிங்கிள் ட்ராக் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது அப்படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டாவது பாடல் டிசம்பர் 5ஆம் திகதி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினமான டிசம்பர் 5ஆம் திகதியன்று ‘அம்மா’ பாசத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் பாடல் வெளியாகவிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.