அசோக் செல்வன் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படமான ‘எஸ்டேட்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் டிசம்பர் மாதம் ஒன்பதாம் திகதியன்று பட மாளிகைகளில் வெளியாகிறது.
இயக்குநர் கார்த்திக். வி இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘எஸ்டேட்’. இதில் கலையரசன், அசோக் செல்வன், ரம்யா நம்பீசன், சுனைனா, டேனியல் போப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அஸ்வந்த் ராஜன் தயாள் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு குணா பாலசுப்ரமணியன் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டிவைன் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் சார்பில் வி. வெங்கடேஷ் தயாரித்திருக்கிறார்.

படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து, டிசம்பர் மாதம் ஒன்பதாம் திகதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தில் வழக்கமான ஹாரர் திரில்லர் திரைப்படங்களை விட கூடுதல் திகில் சம்பவங்கள் இடம்பெற்று இருப்பதாலும், உண்மை சம்பவத்தின் அடிப்படையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதாலும், பார்வையாளர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
