அசைவம் சாப்பிடுபவர்கள் ஆன்மிக தர்மத்துக்கு எதிரானவர்களா? – அதிகாலை சுபவேளை!
இன்றைய பஞ்சாங்கம்
20. 5. 21 வைகாசி 6 வியாழக்கிழமை
திதி: அஷ்டமி காலை 7.38 வரை பிறகு நவமி
நட்சத்திரம்: மகம் காலை 11.35 வரை பிறகு பூரம்
யோகம்: அமிர்தயோகம் காலை 11.35 வரை பிறகு சித்தயோகம்
ராகுகாலம்: பகல் 1.30 முதல் 3 வரை
எமகண்டம்: காலை 6 முதல் 7.30 வரை
நல்லநேரம்: காலை 12.30 முதல் 1.30 வரை
சந்திராஷ்டமம்: உத்திராடம் காலை 11.35 வரை பிறகு திருவோணம்
சூலம்: தெற்கு
பரிகாரம்: தைலம்
வழிபடவேண்டிய தெய்வம்: லட்சுமி ஹயக்ரீவர்
அசைவம் சாப்பிடுபவர்கள் ஆன்மிக தர்மத்துக்கு எதிரானவர்களா?
இந்த உடலை அன்னமயகோஷம் என்பார்கள் ஞானிகள். நாம் உண்ணும் உணவால்தான் உடல் வளர்கிறது. அப்படியிருக்க நாம் உண்ணும் உணவு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்னும் கேள்வி காலம்தோறும் இருந்துவருகிறது. உணவுக்கும் நம் குணங்களுக்கும் உள்ள தொடர்பை ஞானிகள் விளக்கியிருக்கிறார்கள். அப்படியானால் நம் உணவுக்கும் ஆன்மிகத்தில் ஈடுபடுவதற்கும் தொடர்பு இருக்கிறதா என்னும் கேள்வி பலகாலமாக நம்மிடையே இருந்துவருகிறது.
அசைவம் சாப்பிடுபவர்கள் ருத்திராட்சம் அணியலாமா என்று பலரும் கேட்பதைப் பார்த்திருக்கலாம். அசைவம், பிற உயிர்களைக் கொன்று உருவாக்கும் உணவு என்பதால் அதை எடுத்துக்கொள்வது தவறா என்னும் சந்தேகம் சிலருக்கு உள்ளது. சிலர் அசைவம் நம் ஆன்மிக தர்மத்துக்கு எதிரானது என்று கூடப் பேசிவருகிறார்கள். அப்படிப் பேசுவது சரியா என்னும் கேள்விக்கான விடையை அறிந்துகொள்ள கீழே இருக்கும் வீடியோவைப் பாருங்கள்.