அங்குனுகொலபலஸ்ஸ வட்டிய சந்தியில் இரு குழுக்களுக்கிடையில் நேற்றிரவு (21) இடம்பெற்ற மோதலின் போது மேற்கொள்ளப்பட்ட கைக் குண்டு வீச்சுத் தாக்குதலில் 17 பேர் காயமடைந்துள்ளதாக அங்குனுகொலபலஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் தங்கல்லை மற்றும் அம்பிலிப்பிட்டி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் இரு தரப்பையும் சார்ந்தவர்களும் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை அங்குனுகொலபலஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்