அங்கவீனமுற்ற இராணுவத்தினர் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தாவிட்டால் தொடர்ச்சியான உண்ணாவிரதம் ஒன்றை ஆரம்பிப்பதாக அங்கவீனமுற்ற இராணுவத்தினர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் யூ.டீ. வசந்த தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் சிலர் புறக்கோட்டை பிரதேசத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ள வேளையில் இவர் இந்த கருத்தினை தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த மே மாதம் 15ம் திகதி முதல் தமது ஓய்வூதிய பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுத்தருமாறு கூறியும் இதுவரை அது நடைபெறவில்லை எனவும் தெரிவித்து அங்கவீன இராணுவத்தினர் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.