ஓய்வுபெற்ற அங்கவீனமுற்ற இராணுவ வீரர்ககள் குழுவினருக்கு ஒரு தொகை செயற்கை கால்கள் மற்றும் மருத்துவ உதவிகள் என்பன வழங்கிவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
ரணவிரு சேவா அதிகாரசபையில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வின் மூலம் அவர்களின் வாழ்க்கையை இலகுபடுத்தும் வகையில் ரணவிரு சேவா அதிகாரசபையின் சுகாதாரப்பிரிவு இந்நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.
இதன்போது, அங்கவீனமுற்ற இராணுவ, விமானப்படை, மற்றும் காவல்துறை ஆகிய எட்டு யுத்த வீரர்களுக்கு செயற்கை கால்கள் மற்றும் சிறுநீர் கழிக்கும் பைகள் என்பன வழங்கிவைக்கப்பட்டன. திருமதி கமானி கருணாரத்னவின் முயற்சியால் பெறப்பட்ட நிதியின் ஊடாக நான்கு செயற்கை கால்கள் ரணவிரு சேவா அதிகாரசபைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.
இதேவேளை, ரணவிரு சேவா அதிகாரசபையின் ஒதுக்கீட்டில் பெறப்பட்ட சிறுநீர் கழிக்கும் பைகள் ஏனைய நால்வருக்கு வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் ரணவிரு சேவா அதிகாரசபையின் பிரதித்தலைவர் திருமதி உபுலங்கணி மாலாகமுவ, ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) NAPC நாபாகொட மற்றும் ஏனைய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.