கொழும்பு சுகததாச நீச்சல் தடாகத்தில் நடைபெற்ற 49ஆவது அகில இலங்கை பாடசாலைகள் வயது நிலை நீச்சல் சம்பியன்ஷிப்பில் ஆண்கள் பிரிவில் மருதானை புனித சூசையப்பர் கல்லூரியும் பெண்கள் பிரிவில் கொழும்பு மகளிர் கல்லூரியும் கலவன் பிரிவில் வத்தளை லைசியம் கல்லூரியும் சம்பியனாகின.
30ஆவது வருடமாக நெஸ்லே மைலோவின் பூரண அனுசரணையுடன் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் வயதுநிலை நீச்சல் சம்பியன்ஷிப்பில் ஒவ்வொரு வயது பிரிவிலும் அதிசிறந்த நீச்சல் வீர, வீராங்கனைகள் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டு விசேட விருதுகள் வழங்கப்பட்டது.
அவர்களில் ஸாஹிரா வீரர் எம். எப். முஹம்மத், புனித பேதுருவானவர் வீரர் கிறிஸ் பவித்ர, மியூசியஸ் வீராங்கனை ருஷாலி திசாநாயக்க ஆகிய மூவரும் தலா 3 புதிய சாதனைகளை நிலைநாட்டி தத்தமது வயது பிரிவுகளில் சம்பியன்களாகியமை விசேட அம்சமாகும்.
சம்பியன்கள் (ஆண்கள்)
14 வயதின் கீழ்: துலக்ஷ கனிது (கம்பஹா லைசியம் ச.பா.) 30 புள்ளிகள்
16 வயதின் கீழ்: ஓக்கித்த குணசேகர (எலிஸபெத் மொயர் பாடசாலை) 30 புள்ளிகள்
18 வயதின் கீழ்: எம்.எவ். முஹம்மத் (ஸாஹிரா) 3 புதிய சாதனைகள் 45 புள்ளிகள்
20 வயதின் கீழ்: கிறிஸ் பவித்ர (புனித பேதுருவானவர்) 3 புதிய சாதனைகள் 45 புள்ளிகள்
சம்பியன்கள் (பெண்கள்)
14 வயதின் கீழ்: ருஷாலி திசாநாயக்க (மியூசியஸ்) 3 புதிய சாதனைகள் 45 புள்ளிகள்
16 வயதின் கீழ்: பீ.ஆர். வந்தனி பெர்னாண்டோ (களுத்துறை மகளிர் பெண்கள் வித்தியாலயம்) 30 புள்ளிகள்
18 வயதின் கீழ்: ஜெசிக்கா சாரங்கேல் செனவிரட்ன (திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடம்) ஒரு புதிய சாதனை 35 புள்ளிகள்
20 வயதின் கீழ்: நவஞ்சனா சிறிவர்தன (பத்தளை லைசியம் ச.பா.) 3 சாதனைகள் 45 புள்ளிகள்