அகதிகள் அணிக்கு புதிய கொடி: வடிவமைத்தது யார் தெரியுமா?
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அகதிகள் அணிக்கு புதிதாக கொடி, தேசிய கீதம் ஆகியவை தயார் செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளில் போர் மற்றும் உள்நாட்டு போர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விளையாட்டு நட்சத்திரங்கள் அகதிகள் அணி என்ற பெயரில் ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர்.
ரியோ ஒலிம்பிக்கில் முதன்முறையாக இவர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தற்போது 10 பேர் அகதிகள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.’
இவர்களுக்கு என்று தனி கொடி, தேசிய கீதம் கிடையாது. ஒலிம்பிக் கமிட்டியின் 5 வளையங்கள் கொண்ட கொடியின் கீழ் தான் விளையாடுகின்றனர்.
இந்நிலையில் இவர்களுக்கு என புதிய கொடி, தேசிய கீதம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை சிரியாவை சேர்ந்த அகதிகள் உருவாக்கியுள்ளனர்.
கொடியை சிரிய அகதியான ஓவியர் யாரா என்ற பெண் உருவாக்கியுள்ளார். இவர் தற்போது ஆம்ஸ்டர்டாமில் வசித்து வருகிறார். இந்தக் கொடி கருப்பு, ஆரஞ்ச் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதே போல் இஸ்தான்புல்லில் வசித்து வரும் சிரிய அகதியான முடாஸ் அரியன் அகதிகளுக்கான தேசிய கீதத்தை தயாரித்துள்ளார். இது அகதிகள் அணியினரிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.