ஃபுளோரிடா மாகாணத்தில் முதல் ஸிக்கா பாதிப்பு கண்டுபிடிப்பு
அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ளூர் கொசுக்களால் ஸிக்கா தொற்று பாதிப்பு ஏற்பட்டது முதல் முறையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நான்குப் பேருக்கு நோய் தொற்று ஏற்படுவதற்கு இரு இடங்கள் காரணமாக உள்ளது என்றும், ஆனால் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் இல்லை என்றும் ஃபுளோரிடா ஆளுநர் ரிக் ஸ்காட் கூறியுள்ளார்.
பாதிப்புகள் உள்ள பகுதிகளிலிருந்து மருந்து தெளிப்பான்கள் மூலம் கொசுக்களை விரட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஸிக்கா வைரஸ் தொற்றினால், கடும் பிறப்புக் குறைபாடுகள் ஏற்படுகின்றன.
மேலும், ஸிக்கா வைரஸை சுமக்கும் கொசுக்கள் அமெரிக்காவில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.
இதுவரை, வெளிநாடுகளில் ஸிக்கா தொற்றால் 1,400 பேர் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.