விமான நிலையங்களில் தாக்குதல் நடத்துவோம் : ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல்
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உலகம் முழுவதும் ஆதரவாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில் அவர்கள் ஒரு மிரட்டல் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அதில் அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் அல்லது நியூயார்க்கில் உள்ள ஜான் எப்.கென்னடி சர்வதேச விமான நிலையத்தின் மீது விரைவில் தாக்குதல் நடத்தப்படும். அதேபோன்று இங்கிலாந்தின் ஹீத்ரோ, விம்பிள்டனின் அகமது விமான நிலையங்களையும் தாக்குவோம் என மிரட்டியுள்ளனர்.
எனவே விமானங்களிலும், விமான நிலையங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து இருநாட்டு விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.