விஞ்ஞானிகள் புதிதாக அறிமுகப்படுத்தும் மின்பொறிமுறை இதய இணைப்பு
தற்போது விஞ்ஞானிகள் இதய முடுக்கி போன்று செயற்படக்கூடிய, இதயத்தின் தன்மையை அவதானிக்கக் கூடிய புதியதொரு மின்பொறிமுறை இதய இணைப்பை கண்டுபிடித்துள்ளனர்.
இது இதயத்தின் தன்மையை அறிந்து அதற்குரிய சிறந்த பதில் தரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
Harvard பல்கலைக்கழக ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்ட இந் நுண்ணிய இலத்திரனியல் கட்டமைப்பு இதயக் கலங்களில் பொருத்தப்படக்கூடியது என தெரிவிக்கப்படுகிறது.
இதயத் தாக்கினால் பாதிப்புக்குள்ளாகும் இதயத் தசைகளை இதைக்கொண்டு திருத்த முடியும் எனவும் சொல்லப்படுகிறது.
மேற்படி கட்டமைப்பு மனித உடலில் இலகுவாக பொருத்தப்படக்கூடியது.
இது தொடர்பான விடயங்கள் Nature Nanotechnology எனும் ஆய்வு பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.